1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu rtain chances today

7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Tamilnadu
தமிழகம் முழுவதும் கோடைக்காலத்திலும் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களில் வெயில் கடுமையாம இருந்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளான நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக பல பகுதிகளில் லேசான அளவு மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
பாஜகவால் மேற்கு வங்கத்தில் கொரோனா அதிகமாகிவிட்டது… மம்தா பானர்ஜி தாக்கு!