1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (21:22 IST)

மீண்டும் பள்ளிக்கழிவறையில் விபத்து: பாம்பு கடித்த மாணவன் மருத்துவமனையில் அனுமதி!

சமீபத்தில் நெல்லையில் பள்ளி கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் திருச்சியில் உள்ள மணப்பாறையில் பிச்சம்பட்டி என்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கழிவறைக்கு சென்ற 16 வயது மாணவனை பாம்பு கடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பாம்பு கடித்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கழிவறை அருகே புதர்மண்டி கிடந்ததாலும், சுற்றுச்சுவர் இல்லாததாதே இந்த விபத்திற்கு காரணம் என்றும் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர்