வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 9 ஜனவரி 2020 (18:56 IST)

”காங்கிரஸை ஏன் திமுக எதிர்க்கவில்லை?”.. ஸ்மிரிதி இரானி கேள்வி

குடியுரிமை வழங்குவது தொடர்பாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இருந்தபோது திமுக ஏன் எதிர்க்கவில்லை என மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பேசியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் கடந்த மாதம் திமுக கூட்டணி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேரணி நடத்தியது.

இந்நிலையில் மதுரையில் குடியுரிமை சட்டம் குறித்த விளக்க கூட்டத்தில் பங்கு பெற்று பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி “காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் குடியுரிமை சட்டம் குறித்து இடம்பெற்றிருந்தது. அதனை பாஜக நிறைவேற்றியுள்ளது. காங்கிரஸ் தேர்தக் அறிக்கையை எதிர்க்காத திமுக, பாஜகவை மட்டும் ஏன் எதிர்க்கிறது” என கேள்வி எழுப்பியுள்ளார்.