1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 9 ஜனவரி 2020 (17:24 IST)

திமுக ஏன் பாகிஸ்தானை ஆதரிக்கிறது? மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேள்வி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370ஆவது பிரிவை ரத்து செய்தபோது அந்த நடவடிக்கையை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகிய இரண்டு பேர் மட்டும்தான் எதிர்த்ததாக பாஜகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
 
அதேபோல் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் திமுகவும் மத்திய அரசை எதிர்த்து சுமத்தி வருகிறது. இந்த நிலையில் ‘திருவள்ளுவர் மண்ணிலிருந்து கேட்கிறேன், திமுக ஏன் பாகிஸ்தானை ஆதரிக்கிறது? என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வரலாற்றுப் பிழைகளை சரி செய்யும் பணிகளை மத்திய அரசு செய்யும் என்பதை உறுதியாக கூறுகிறேன் என்றும் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
 
திமுக எம்பி கனிமொழியும் ஸ்மிருதி இரானியும் நெருங்கிய தோழிகள் என்று கூறப்பட்டு வரும் நிலையில் திமுக மீது இப்படி ஒரு பகீர் குற்றச்சாட்டை ஸ்மிருதி இரானி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது