செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 மார்ச் 2019 (19:33 IST)

கோவை சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டாரா? எப்ஐஆர்-ல் அதிர்ச்சி தகவல்

கோவை அருகே ஒன்றாம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில் இன்று காலை வெளிவந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது உறுதியானது
 
இந்த நிலையில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக கோவை சிறுமி ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக இந்த வழக்கின் எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் சிறுமியின் வாய், மூக்கில் துணி வைத்து இறுக்கமாக மூடப்பட்டதாகவும், அதனால் அவர் மூச்சு திணறி மரணம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் கோவை சிறுமியின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து சந்தேகம் எழுந்துள்ள ஒருசிலரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் இந்த வழக்கு குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என போலீசார் நோட்டீஸ் மூலம் அறிவித்துள்ளனர். போலீசார்களின் தீவிர நடவடிக்கையால் இன்னும் ஓரிரு நாட்களில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று கூறப்படுகிறது