வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 20 மார்ச் 2019 (18:00 IST)

பெண்ணை கற்பழித்து கொன்ற 7 பேர் மீதான வழக்கு ; நீதிமன்றம் அதிரடி

பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தில் இன்று மனநலம் பாதிக்கப்பட்ட  27 வயது  பெண்ணை கொடூரமாக கற்பழித்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஏழு குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தக் கொலையானது டெல்லியில் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிர்பயா வழக்கைப் போலவே உள்ளது. நீதிபதிகள் ஏ.பி சௌத்ரி மற்றும் சுரிந்தர் குப்தா இருவரும் குற்றவாளிகள் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
 
மேலும் குற்றவாளிகளுக்கு தலா ரூ.1.75 லட்சத்திலிருந்து ரூ.  50 லட்சமாக அபராத்தொகையை உயர்ந்தினார்.குற்றவாளிகள் அபராதத்தொகை செலுத்தத் தவறினால் அவர்களின் நில உடமை வீடுகளை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
 
கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி அக்பர்பூர் கிராமத்தில் ஒரு சடலம் கிடந்துள்ளது. அதை ஒரு கும்பல்தான் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாகவும் புகார் எழுந்தது. பின்னர் பிரேத பரிசோதனை முடிவில் அது பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டடது உறுதியானது.
 
இந்நிலையில் 7 பேர் மீதான் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில்  இன்று  நீதிபதி குற்றாவாளிகளும் கட்டாயமாக அபராததுடன் கூடிய தண்டனை அனுபவிக்க வேண்டுமெ என உத்தவிட்டார். அதற்காக குற்றவாளிகள் தம் நிலங்கள் சொத்துகளை விற்று அதை பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண்ணின் தங்கையிடம் அளிக்க வேண்டும் என்று கூறினார்.
 
இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த உதவிகாவல் காவல் ஆய்வாளர் முகமது லியாஸை நீதிபதி அமர்வு வெகுவாகப் பாரட்டினர்.
 
கடந்த 2102 ஆம் ஆண்டில் டில்லியில் மருத்துவ மாணவி நிர்பயாவை (23)ஒடும் பேருந்தில் வைத்து கற்பழித்து கொன்ற 6 பேர் கைதுசெய்யப்பட்டனர். அதன் பின்னர் ,மேல் சிகிச்சைக்காக நிர்பயா சிங்கப்பூட் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் 13 நாட்களுக்குப் பிறகு இறந்தார்.
 
இதுநடந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.