வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 19 ஜூலை 2023 (11:44 IST)

6 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை: தர்மபுரியில் அதிர்ச்சி சம்பவம்..!

தருமபுரியில் 6 வயது சிறுவனை உறவினரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
 
தர்மபுரி அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தில் குடிநீர் தொட்டியில் இருந்து 6 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்த விசாரணையில் சிறுவனின் உறவினரான 18 வயது இளைஞர் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
ஐஸ்கிரீம் வாங்கி தருவதாகக் கூறி அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்து பிரகாஷ்  கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
6 வயது சிறுவன் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் டேப் ஒட்டப்பட்டு குடிநீர் தொட்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் சிறுவனை ஒருவர் மட்டும் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என  உறவினர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran