ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 5 ஜூலை 2021 (19:35 IST)

சிவசங்கர் பாபாவின் 5 பக்தைகளுக்கு முன்ஜாமின்: நீதிமன்றம் உத்தரவு!

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுசில்ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்தவர் சிவசங்கர் பாபா. இவர் மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் கூறியதை அடுத்து போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டர். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் விசாரணை நடந்து கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சிவசங்கர் பாபாவின் பெண் பக்தைகள் சிலர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து சிவசங்கர் பாபாவின் ஐந்து பெண் பக்தர்கள் தங்களுக்கு முன் ஜாமின் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் 
 
இந்த மனு மீது இன்று விசாரணை நடந்த நிலையில் 5 பெண் பக்தைகளுக்கும் முன்ஜாமீன் தந்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இருப்பினும் அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது