அண்ணாமலை குறித்து சர்ச்சை பேச்சு: திமுக பேச்சாளர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்!
பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக கவர்னர் ரவி ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அண்ணாமலை மற்றும் கவர்னர் ரவி குறித்து ஒருமையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ வைரலானது.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்
Edited by Mahendran