வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 14 ஜனவரி 2023 (13:16 IST)

பாஜகவை எதிர்த்து சென்னை – குமரி நடைபயணம்! – காயத்ரி ரகுராம் முடிவு!

பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காக பாஜகவை கண்டித்து சென்னையிலிருந்து குமரி வரை நடைபயணம் செல்ல உள்ளதாக காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கும், அக்கட்சியை சேர்ந்த காயத்ரி ரகுராமுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் நிலவி வந்த நிலையில், அண்ணாமலை திட்டமிட்டு தன்னை பற்றிய அவதூறு கருத்துகளை உருவாக்குவதாக காயத்ரி ரகுராம் கூறினார். அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பேசியிருந்தார். மேலும் தொடர்ந்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குறித்தும், பாஜக குறித்தும் விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத பாஜக கட்சியை கண்டித்து சென்னை முதல் கன்னியாக்குமரி வரை நடைபயணமாக செல்ல உள்ளதாக காயத்ரி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “பா.ஜ.க பெண்களை அவமானப்படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் ஜனவரி 27-ம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடை பயணம் நடத்துவேன். தனியாக இருந்தாலோ அல்லது யார் வேண்டுமானாலும் என்னுடன் சேரலாம்.

எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படவில்லை. என் உயிர் போனாலும் செய்வேன். நான் நீதிக்காக போராடுவேன். நான் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். இது அரசியலில் பொது சேவை மற்றும் பொது வாழ்க்கை பெண்களுக்கானது” என்று தெரிவித்துள்ளார்.

Edit By Prasanth.K