வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 14 ஜனவரி 2023 (09:10 IST)

’அரசியல் ஜோக்கருக்கு Z பிரிவு பாதுகாப்பு.. சூப்பர் மோடி ஜீ’ – காயத்ரி ரகுராம் கண்டனம்!

Gayathri Raghuram
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடியை குறிப்பிட்டு காயத்ரி ரகுராம் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கும், அக்கட்சியை சேர்ந்த காயத்ரி ரகுராமுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் நிலவி வந்த நிலையில், அண்ணாமலை திட்டமிட்டு தன்னை பற்றிய அவதூறு கருத்துகளை உருவாக்குவதாக காயத்ரி ரகுராம் கூறினார். அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் தற்போது பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டு வந்த ஒய் பிரிவு பாதுகாப்பு ஜீ பிரிவு பாதுகாப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை குறிப்பிட்டு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் காயத்ரி ரகுராம். மேலும் அந்த பதிவில் “அபாசம் பேச்சாளரின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை. ஒரு பெண்ணைப் பற்றி தவறாகப் பேசும் ஒரு தலைவருக்கு Z வகைப் பாதுகாப்பு. ராஜினாமா செய்ய சரியான முடிவை எடுத்தேன். பெண்கள் பாதுகாப்பு சூப்பர். நன்றி மோடி ஜி நான் உங்களை அப்பாவாக பார்த்தேன். அரசியல் ஜோக்கர் Z பிரிவு பாதுகாப்பு மக்களின் பணத்தில் இருந்து. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்தரியில் குடை பிடிப்பான்” என்று விமர்சித்துள்ளார்.

மேலும் தான் எழுதியுள்ள கடிதத்தில் விரைவில் களத்தில் சந்திப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Edit By Prasanth.K