செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (11:06 IST)

மனோவின் மகன்களை கும்பல் தாக்குவது போன்ற வீடியோ வைரல்: உண்மைத்தன்மை குறித்து விசாரணை

பாடக மனோவின் மகன்களை ஒரு கும்பல் தாக்குவது போன்ற வீடியோ வைரலாகி வரும் நிலையில் இந்த வீடியோவின்  உண்மைத்தன்மை குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
சென்னையை சேர்ந்த கிருபாகரன் மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய இருவரும்  
கடந்த 10-ம் தேதி நள்ளிரவில் கால்பந்து பயிற்சி முடித்துவிட்டு பாடகர் மனோவின் வீட்டருகே உள்ள ஒரு உணவகத்துக்கு சென்றனர். அப்போது, அங்கு நின்ற நால்வர் கிருபாகரன் மற்றும் நிதிஷுடன் தகராறில் ஈடுபட்டனர். மேலும், அவர்களை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
 
இந்த தாக்குதலில், கிருபாகரனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தகவல் கிடைத்ததும், வளசரவாக்கம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, கிருபாகரன் மற்றும் நிதிஷை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
விசாரணையின் போது, இந்த தாக்குதலில் பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்களான ஷகீர்), ரபீக், மற்றும் அவர்களது வீட்டில் வேலை செய்து வந்த விக்னேஷ்  மற்றும் தர்மா ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, வளசரவாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விக்னேஷ் மற்றும் தர்மாவை கைது செய்தனர், ஆனால் மனோவின் மகன்கள் தலைமறைவாக உள்ளனர்.
 
இதற்கிடையில், மனோவின் மனைவி தனது மகன்கள் சிலரால் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். சம்பவத்தன்று, மனோவின் மகன்களை 10க்கும் மேற்பட்டோர் கட்டை, கல் போன்ற பொருட்களால் தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த காட்சிகள் உண்மையானதா என போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran