புதன், 2 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 14 செப்டம்பர் 2024 (18:43 IST)

நீக்கப்பட்ட அதே வீடியோ மீண்டும் திருமாவளவன் எக்ஸ் பக்கத்தில்.. பெரும் பரபரப்பு..!

ஆட்சியில் பங்கு வேண்டும் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று திருமாவளவன் பேசிய பழைய வீடியோ அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில் அதன் பின் சில நிமிடங்களில் அந்த வீடியோ நீக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அதே வீடியோ திருமாவளவன் எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
முன்னதாக இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டு ஏன் நீக்கப்பட்டது என்று செய்தியாளர்கள் கேட்டபோது அட்மின் தான் செய்திருப்பார் அது பற்றி எனக்கு தெரியாது விசாரித்துக் கூறுகிறேன் என்று திருமாவளவன் கூறி இருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் திருமாவளவன் எக்ஸ் பக்கத்தில் அந்த வீடியோ பதிவு செய்திருப்பது கூட்டணி கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவின் கேப்ஷனாக கூறப்பட்டுள்ளதாவது:
 
கடைசி மனிதனுக்கும் சனநாயகம்!
எளிய மக்களுக்கும் அதிகாரம்! 
ஆட்சியிலும் பங்கு !அதிகாரத்திலும் பங்கு ! -  என 1999ல் தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்த போதே உரத்து முழங்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி " - 
 
என்று கடந்த செப்-12 ஆம் தேதி மறைமலை நகரில் நடைபெற்ற மண்டல செயற்குழுவில் ஆற்றிய உரையின் சுருக்கம்..
 
Edited by Mahendran