பொள்ளாச்சி காம வெறியர்களின் அரசியல் தொடர்பு.! தைரியமாக ட்வீட் செய்த சின்மயி.!

Last Updated: திங்கள், 11 மார்ச் 2019 (19:16 IST)
தற்போது சமூக வலைத்தளங்கள் முழுக்க பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது பொள்ளாச்சி காம வெறியர்களின் கொடூர செயல்களை பற்றி தான்.  


 
250க்கும் மேற்பட்ட பெண்களை பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்து, பணம் பறித்து, மோசமாக கொடுமை செய்து  மிரட்டல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் பலருக்கும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
 
பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவன் தலைமையிலான இந்த கும்பல் தான் பாலியல் வக்கிரங்களையும், கொடூரங்களையும் அரங்கேற்றியுள்ளது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட நால்வரை போலீசார் கைது செய்துள்ளதாகவும்,  இந்த குற்றத்தில் தொடர்புடைய  நாகராஜ் என்பவன் தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
 
இதயத்தை பதறவைக்கும் இந்த பாலியல் குற்றங்களின் பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதுடன், இந்த குற்றத்தில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் தண்டனையையும் பெற்றுத் தர வேண்டும் என்றும் பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் பொள்ளாச்சி பலாத்காரத்திற்கு பின்னால் அரசியல்வாதிகளின் பின்னணி  இருப்பதாக பாடகி சின்மயி தைரியமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 
 
இதைப்பற்றி அவர் கூறியதாவது,  பொள்ளாச்சி கற்பழிப்பு கும்பல்அரசியல் ரீதியாக இணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெண்களுடன் ‘நண்பர்களாக’ பழகி கற்பழிக்க முயல்கின்றனர். அதுமட்டுமின்றி  பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர்களில் ஒருவர் அதே பாலியல் வன்கொடுமை செய்த நபர்களால் தாக்கப்பட்டுள்ளார் என்று சின்மயி குறிப்பிட்டுள்ளார்.


 
மேலும் கூறிய சின்மயி, அரசியல்வாதிகள், சமுதாயம் பெண்களை உண்மையில் கவனித்துக்கொள்கிறதா? சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை என எந்தவொரு நீதிக்கும் பெண்களுக்காக பேசுங்கள் இதுதான் உரிய நேரம். நீங்கள் நேஷனல் மீடியாவைத் தேர்ந்தெடுத்தால் எல்லோரும் அதைப் பற்றி ட்வீட் செய்ய வேண்டும் என்று சின்மயி தைரியமாக கூறியுள்ளார். அவரின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதில் மேலும் படிக்கவும் :