கைது செய்தவர்களை விடுவிங்கள், இல்லை என்னை கைது செய்யுங்கள்: சிம்பு அதிரடி
மெரீனா போராட்டத்தில் வன்முறையில் ஈடுப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? 6 நாட்களாக வராத காவல்துறையினர் அன்று ஏன் வந்தனர்? என்று சிம்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
மெரீனாவில் காவல்துறையினர் நடத்திய வன்முறை குறித்து நடிகர் சிம்பு கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுகுறித்து தற்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து வருகிறார். அதில்,
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடங்கிய போராட்டம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. குறிப்பாக மகளிர் குடும்பத்துடன் போராட்டத்தில் கலந்துக்கொண்டனர். 6 நாட்களாக வராத காவல்துறையினர் அன்று ஏன் வந்தனர். மாணவர்கள் அரை நாள் அவகாசம் கேட்டனர். அன்றைக்கு அவர்கள் கூட்டத்தை கலைக்க ஏதுவும் செய்யாமல் இருந்திருந்தால், கலவரம் எப்படி வந்திருக்கும்.
காவல்துறையினர் மெரீனா உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்து வந்தனர். ஆகையால் அருகில் இருந்த மீனவர்கள் போராட்டத்தில் இருந்தவர்களுக்கு உதவி செய்தார்கள்.
மெரீனாவில் போராட்டத்தை கொண்டாட அனுமதி அளித்திருக்க வேண்டும்.
இவ்வாறு சிம்பு கூறியுள்ளார்.