வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 29 ஏப்ரல் 2021 (12:05 IST)

உங்க ஆளுங்க நம்பரை லீக் பண்ணி மிரட்டுறாங்க! – மோடியை டேக் செய்த சித்தார்த்

தமிழ் திரைப்பட நடிகர் சித்தார்த் பாஜக ஆட்சிக்கு எதிராக பேசி வந்த நிலையில் அவருக்கு பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட நடிகரான சித்தார்த் அவ்வபோது மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை ட்விட்டர் மூலமாக விமர்சித்தும் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் உத்தர பிரதேச ஆக்ஸிஜன் தட்டுப்பாடு மற்றும் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி குறித்து நடிகர் சித்தார் காட்டமாக பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் பதிவிட்டுள்ள அவர் “என்னுடைய தொலைபேசி எண் தமிழக பாஜக மற்றும் அவர்களது ஐடி விங்கால் லீக் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் என்னை மற்றும் என் குடும்பதை கொலை செய்து விடுவதாக மற்றும் கற்பழிப்பு மிரட்டல்கள் என சுமார் 500 அழைப்புகள் வந்துள்ளன. எல்லா எண்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன (அவற்றில் பாஜக இணைப்பு மற்றும் டிபி உள்ளது) இதை கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ட்வீட்டில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ட்விட்டர் ஐடிகளையும் அவர் ஷேர் செய்துள்ளார்.