செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Modified: வியாழன், 29 ஏப்ரல் 2021 (00:40 IST)

செரிமான பிரச்சினைகளுக்கு சிறந்த மருந்தாகும் பிரண்டை !!

பிரண்டை உடலைத் தேற்றும். பசியைத் தூண்டும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.
 
பிரண்டையை துவையல் செய்து சாதத்துடன் சேர்த்துப் சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும், உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும், ஞாபக சக்தி பெருகும், மூளை நரம்புகளும் பலப்படும்.
Ads by 
 
பிரண்டைத் துவையலை குழந்தைகளுக்குத் கொடுத்து வர எலும்புகள் உறுதியாகும். எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும்  பிரண்டை உதவுகிறது.
 
பிரண்டையில் சாறு 6 தேக்கரண்டி மற்றும் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர பெண்களுக்கு மாதவிடாய்  சீராகும்.
 
Pirandai 1
பிரண்டையை சிறு துண்டுகளாக நறுக்கி, நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, சிறு நெல்லிக்காய் அளவிற்கு காலை, மாலை சாப்பிட ரத்த மூலம் குணமாகும்.
 
இரைப்பை அழற்சி, அஜீரணம், பசியின்மை போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு பிரண்டை துவையல் மிகவும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. உள் மற்றும் வெளி  மூலம் மற்றும் வயற்றில் உள்ள குடற்புழுக்களை நீக்குவதற்கும் பிரண்டை நல்ல மருந்தாக விளங்குகிறது.