1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (11:33 IST)

சென்னையில் ரவுடியை சுட்டுப் பிடித்த எஸ்.ஐ. கலைச்செல்வி மீது தாக்குதல்.. அதிர்ச்சி தகவல்..!

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் ரவுடிகளை சுட்டு பிடித்த பெண் எஸ்ஐ கலைச்செல்வி மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கீழ்பாக்கம் அருகே பிரபல ரவுடி ரோகித் ராஜ் என்பவர் போலீசாரை கத்தியால் குத்தி விட்டு தப்ப முயற்சித்தபோது அங்கிருந்த பெண் எஸ்ஐ கலைச்செல்வி துரிதமாக செயல்பட்டு ரோஹித் ராஜ் வலது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும், பெண் எஸ்.ஐக்கு வாழ்த்துக்கள் குவிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது,

இந்த நிலையில் டிபி சத்திரத்தில் மது போதையில் தகராறு செய்த சீதா என்ற பெண்ணை விசாரிக்க எஸ்ஐ கலைச்செல்வி சென்ற போது அவர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.

எஸ்ஐ கலைச்செல்வியை போதையில் இருந்த சீதா கீழே தள்ளி விட்டதாகவும் இதனால் காயமடைந்த அவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva