திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (17:26 IST)

ரவுடியின் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் குவிந்த பணம்.. வங்கி நிர்வாகம் போலீசில் புகார்..!

பெரியாங்குப்பத்தைச் சேர்ந்த ரவுடி அசோக் குமாருக்கு முத்தாண்டி குப்பம் கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. அசோக் குமாரின் வங்கி கணக்கில், ஒரே மாதத்தில் அடுத்தடுத்து ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம், ரூ.50 லட்சம் என பணம் குவிந்ததால் சந்தேகம் அடைந்த வங்கி நிர்வாகம் போலீசில் புகார் செய்தது.
 
ஆனால் வங்கி நிர்வாகம் போலீசில் புகார் செய்த தகவல் தெரியவந்ததும், அசோக் குமார் தனது நண்பர்கள் 7 பேருக்கு ஆன்லைனில் பணத்தை பிரித்து அனுப்பியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தற்போது அசோக் குமாரின் வங்கி கணக்கில் ரூ.50 லட்சம் மட்டுமே இருந்ததால், போலீசார் அவரது வங்கி கணக்கை முடக்கியுள்ளனர்.
 
மேலும் அசோக் குமார் தலைமறைவாக உள்ள நிலையில், அவர் பணம் அனுப்பிய 7 பேரிடமும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ரவுடி அசோக் குமார் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் பணத்தை அனுப்பியவர்கள் யார்? எதற்காக அனுப்பினார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran