1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 26 ஜூன் 2020 (09:57 IST)

தந்தை - மகன் அடித்து கொலை: இன்று கடையடைப்பு போராட்டம்!

தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருக்கும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய தந்தை, மகன் ஆகிய இருவரும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடையைத் திறந்ததாக விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். 
 
ஆனால் அங்கு போலிஸார் கடுமையாக தாக்கியதால் இருவரும் அதிகப்படியான ரத்தப்போக்கு காரணமாக மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நீதி விசாரணை வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
அதன்படி சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை, மகன் விசாரணைக் காவலில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நீதி கேட்டு தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடையடைப்பை தொடர்ந்து மாலை 5 மணிக்கு அஞ்சலி செலுத்தப்படும். அதோடு தமிழகத்தில் இன்று 4 மணி நேரம் மருந்து கடைகள் மூடப்பட்டது.  இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்து கடைகள் மூடல்.