தமிழகத்தில் இன்று திடீரென மூடப்படும் மருந்துக்கடைகள்: என்ன காரணம்?
தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்து கடைகள் மூடப்படும் என மருத்துவ வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்த போதிலும் மருந்து கடைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் ஒருநாள் கூட மருந்துக்கடைகள் மூடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு வணிகர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதனை அடுத்து சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டும் மருந்து கடைகள் மூடப்பட்டு இருக்கும் என மருத்துவ வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
முழு கடையடைப்புக்கு மருத்துவ வணிகர்கள் சங்கம் முழுமையான ஆதரவு கொடுத்த போதிலும் பொதுமக்களின் நலன் கருதி 4 மணி நேரம் மட்டும் மருந்து கடைகள் அடைத்து வணிகர் சங்க பேரமைப்புக்கு ஆதரவு அளித்து வருவதாக மருத்துவ வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஆகிய இருவர் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் இறந்தது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என அனைத்து வணிகர் சங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது