1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 25 ஜூன் 2020 (13:56 IST)

நீங்கள் தான் மக்களின் அரசா? இயக்குனர் பா.ரஞ்சித் ஆவேச டுவிட்

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் கடை வியாபாரிகள் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்து அரசியல் கட்சித் தலைவர்களும் வியாபாரிகள் சங்கமும் அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர். மேலும் நாளை வணிகர் சங்கங்களின் சார்பில் முழு கடை அடைப்பு நடத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தந்தை-மகன் கொலை விவகாரம் ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் தந்தை-மகன் ஆகிய இருவருமே உடல்நல கோளாறு காரணமாகத் தான் மரணம் அடைந்தார்கள் என்று நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் முதல்வரின் இந்த அறிக்கை குறித்து இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்காமல், மிக கொடூரமாக நிகழ்த்தபட்டிருக்கும் சாத்தான் குளம் தந்தை, மகன் படுகொலைக்கு  அவர்களின் உடல் நலக்குறைபாடு தான் காரணம் என்று அறிக்கை விடுத்து, படுகொலைக்கு காரணமான காவலர்களை காப்பதற்கு துணியும் தமிழக அரசே! நீங்கள் தான் மக்களின் அரசா?? என்று கேள்வி எழுப்பியுள்ளார். பா.ரஞ்சித்தின் இந்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது