திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 26 டிசம்பர் 2017 (19:56 IST)

ரயில் நிலையங்களில் ஷாப்பிங் மால்; லாபம் இல்லாமல் தவிக்கும் மெட்ரோ ரயில்வே

மெட்ரோ ரயில் நிறுவனம் மக்களை கவரும் விதமாக ரயில் நிலையங்களில் ஷாப்பிங் மால்களை நிறுவ உள்ளதாக தெரிவித்துள்ளது.

 
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மக்களிடையே அதிக வரவேற்பு பெறாததால் போதிய வருமானம் இல்லாமல் தவித்து வருகிறது. மெட்ரோ ரயில் நிறுவனம் நஷ்டத்தில் இயக்குவதாக கூறப்படுகிறது. இதனால் மக்களை கவர பல முக்கிய திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நவீன வசதியுடன் கட்டமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷாப்பிங் மால்களை நிறுவ மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் அனுமதி வாங்கிவிட்டதாகவும், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் விரைவில் பயணிகளின் எண்ணிக்கை உயரும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.