மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதைக்குள் புகுந்த பேருந்து; 4 பேர் பலி
ரஷ்யா தலைநகரில் உள்ள சுரங்கப்பாதைக்குள் பேருந்து புகுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஸ்லாவியன்ஸ்கி மெட்ரோ ரெயில் நிலைய சுரங்கப்பாதை அருகே இன்று வந்து கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுரங்கப்பாதையினுள் புகுந்தது. இதில், அங்கு சென்று கொண்டிருந்த நான்கு பேர் பலியானதாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பனிப்பொழிவு அதிகமாக உள்ள காரணத்தால் பேருந்தில் பிரேக் பிடிக்காமல் விபத்து ஏற்பட்டதாக அப்பேருந்தின் டிரைவர் போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இருப்பினும் இது எதேர்ச்சையாக நடந்த விபத்தா அல்லது தீவிரவாத தாக்குதலா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.