திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 25 நவம்பர் 2017 (06:16 IST)

பேருந்துகள், மின்சார ரயில், மெட்ரோ ரயிலுக்கு ஒரே டிக்கெட்: விரைவில் அறிமுகம்

சென்னை போன்ற பெரு நகரங்களில் மெட்ரோ ரயில்கள் அல்லது மின்சார ரயில்களில் ஒரு குறிப்பிட்ட இடம் வரை சென்றுவிட்டு பின்னர் அங்கிருந்து பேருந்துகளில் செல்லும் பயணிகள் அதிகம் உள்ளனர். இவர்கள் பேருந்துக்கு ஒரு டிக்கெட், மின்சார ரயிலுக்கு ஒரு டிக்கெட், மெட்ரோ ரயிலுக்கு ஒரு டிக்கெட் என தனித்தனியாக எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பணம், நேரம் வீணாகிறது.

இதனை தவிர்க்க மாநகர பேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயிலை இணைக்கும் வகையில், ஒருங்கிணைந்த டிக்கெட் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் கூறியுள்ளார்.

மேலும் மாதவரம்-சோழிங்கநல்லூர், மாதவரம்-சிறுசேரி, ஆயிரம் விளக்கு-கோயம்பேடு இடையிலான மெட்ரோ ரயில் 2வது வழித்தடம் அமைக்கும் பணி அடுத்த நிதியாண்டில் துவங்கும்  என்றும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஒரே டிக்கெட்டில் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் பயணிக்கும் வகையில் டிக்கெட் அறிமுகமாகும் செய்தியால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.