செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 9 மார்ச் 2024 (14:08 IST)

வில்லிவாக்கம் பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்படுகிறதா? என்ன காரணம்?

வில்லிவாக்கம் பேருந்து நிலையம் இடம் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 
 
சென்னையில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தை ஐ.சி.எப் அருகில் உள்ள காலி இடத்திற்கு தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது 
 
மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரயில் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் இதற்காக வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் பதினைந்து மீட்டர் ஆழத்தில் சுரங்க ரயில் பாதை அமைக்க திட்டமிட்டுள்ளது 
 
இதற்கான பணிகள் தொடங்கப்பட இருக்கும் நிலையில் வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தை தற்காலிகமாக ஐசிஎப்  அருகே உள்ள இடத்தில் மாற்றம் செய்யப் போவதாகவும் சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து கழகத்திலும் இதற்காக ஒப்புதல் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
மூன்று மாத காலத்திற்கு இந்த பேருந்து இடமாற்றம் செய்யப்படும் என்றும் சென்னை மெட்ரோ பணிகள் முடிவடைந்த உடன் மீண்டும் பழைய இடத்தில் வில்லிவாக்கம் பேருந்து நிலையம் செயல்படும் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran