அந்த பொய்யனுக்கு 3 வருஷம் பத்தாது!.. சவுக்கு சங்கர் கைது பற்றி அமீர் கருத்து!...
அனைத்து அரசியல் கட்சிகளையும் விமர்சித்து பேசி வருபவர் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர். சவுக்கு மீடியா உள்ளிட்ட சில யுடியூப் சேனல்களை இவர் நடத்தி வருகிறார். திமுக ஆட்சியில் திமுக செய்த ஊழல்கள் பற்றி இவர் நிறைய பேசினார். இதையடுத்து இவர் மீது அப்போதைய சென்னை மாநகர கமிஷனர் அருண் ஐபிஎ.ஸ் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.
தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. தற்போது தொடர்ந்து வீடியோ வெளியிடும் சவுக்கு சங்கர் தவெக அரசுக்கு ஆதரவாக பேசி வருகிறார். இந்நிலையில்தான், சன் டிவி செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி தொடர்ந்த வழக்கில் சவுக்கு சங்கர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
தனது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து சவுக்கு சங்கர் கட்டுரை வெளியிட்டதாக 2013ம் வருடம் செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி தொடர்ந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, இயக்குனர் அமீர் தனது வாட்ஸ்அப் பதிவில் ‘அந்த பொய்யனுக்கு 3 வருடங்கள் மிகக் குறைவானது. அவர் பேசிய பொய்களுக்கும், அவதூறுகளுக்கும் பணத்துக்காக பிறர் குடியை கெடுத்ததற்கும் 30 ஆண்டுகள் கொடுத்தாலும் சரியானதே.. இறைவன் மிகப்பெரியவன்’ என பதிவிட்டிருக்கிறார்.