தமிழக முதல்வரை சந்தித்த புனித் ராஜ்குமாரின் சகோதரர்!
தமிழக முதல்வரை சந்தித்த புனித் ராஜ்குமாரின் சகோதரர்!
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவராஜ்குமார் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார்
இந்த நிலையில் அவரது சகோதரரும் நடிகருமான சிவராஜ்குமார் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை முதலமைச்சரின் இல்லத்தில் சந்தித்தார்
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்ததாகவும் இந்த சந்திப்பின் போது இருவரும் சில நிமிடங்கள் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன