1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 9 பிப்ரவரி 2022 (08:53 IST)

நடிகை ரோஜா கோரிக்கை ஏற்ற முதல்வர் ஸ்டாலின்: அதிரடி உத்தரவு!

நடிகையும் ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா சமீபத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழி பாடத்திட்டத்தில் பத்தாயிரம் புத்தகங்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். 
 
இந்த கோரிக்கையை தமிழக முதல்வர் ஏற்றுக்கொண்டதை அடுத்து ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ் பாடநூல்கள் வகுப்பிற்கு ஆயிரம் வீதம் 10 ஆயிரம் புத்தகங்களை இலவசமாக வழங்க தமிழ்நாடு பாடநூல் கழகம் ஒப்புதல் அளித்துள்ளது 
 
இதுகுறித்து ரோஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது கோரிக்கையை ஏற்று ஆந்திரம் வாழ் மாணவர்களுக்கு புத்தகம் அளித்த முதல்வர்களுக்கு ஆந்திர தமிழர்கள் சார்பாக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.