1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 20 ஜூன் 2024 (17:40 IST)

ஆபரேஷன் தியேட்டரில் பாலியல் அத்துமீறல்..! அரசு மருத்துவர் உல்லாசம்..! நடவடிக்கை பாயும் என அமைச்சர் உறுதி.!!

Subramanian
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர் வளாகத்திற்குள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மருத்துவர் சுப்பையா ஷண்முகம் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சுப்பையா சண்முகம் என்பவர் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர் மற்றும் ஆபரேஷன் தியேட்டர் செவிலியர் ஆகியோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர் வளாகத்திற்குள், பாலியல் செயலில் ஈடுபட்டு வந்ததாக புகார் வந்தது.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் சுப்பையா மீது விசாகா கமிட்டியின் உத்தரவுக்கு பிறகு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  
 
விசாகா கமிட்டியின் தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய புற்றுநோய் மருத்துவமனைக்கு சுப்பையா சண்முகத்தை இடமாற்றம் செய்து விட்டோம் என்று தெரிவித்தார். 


இன்னும் ஒரு வாரத்திற்கு பிறகு விசாகா கமிட்டியின் உத்தரவு வரும் என்றும் வந்தவுடன் அவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மா.சுபிரமணியன் தெரிவித்தார்.