1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 3 ஜூன் 2024 (08:08 IST)

புளூடூத் ஹெட்போன் வெடித்து காது சேதம்.. சிவகங்கை இளைஞர் மருத்துவமனையில் அனுமதி..!

சிவகங்கை அருகே இளைஞர் ஒருவர் காதில் ப்ளூடூத் ஹெட்போன் வைத்து பாட்டு கேட்டுக் கொண்டிருந்தபோது திடீரென அந்த ஹெட்போன் வெடித்து அவரது காது சேதம் அடைந்ததாகவும் இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

தற்போது மொபைல் என்பது அனைவரிடமும் சர்வ சாதாரணமாக இருக்கும் நிலையில் ஹெட் போன் அல்லது ப்ளூடூத் ஹெட்போன் மூலம் பாட்டு கேட்டும் வழக்கமும் இளைஞர்கள் மத்தியில் அதிகமாகி வருகிறது.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் என்ற பகுதியைச் சேர்ந்த பன்னீர் செல்வம் என்ற இளைஞர் வீட்டில் படுத்து கொண்டேன் ப்ளூடூத் ஹெட்போனை காதில் மாட்டி பார்த்து கேட்டுக் கொண்டிருந்ததாகவும் அப்போது திடீரென காதில் மாட்டி இருந்த ப்ளூடூத் ஹெட்செட் வெடித்து காதுகள் சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது

இதனை அடுத்து அவர் உடனே மதுரை அரசு மருத்துமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Siva