1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: கோயம்புத்தூர் , புதன், 12 ஜூன் 2024 (13:54 IST)

KMCH மருத்துவமனையில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம்- நடவடிக்கை எடுக்க கோரி தர்ணா!

கோவை அவினாசி சாலையில் உள்ள KMCH மருத்துவமனையில் கடந்த மாதம் ராஜா என்பவர் திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகிகள், காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். 
 
இது தொடர்பாக பீளமேடு காவல்துறையினர் இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட மருத்துவமனை நிர்வாகிகள் காவலர்கள் உட்பட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் இந்த சம்பவம் மருத்துவமனையில்  நடைபெற்றதால் தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை இது குறித்து விசாரணை நடத்தி மருத்துவமனையை மூட வேண்டுமென 
ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் 10 நாட்களுக்குமுன்பு கோவை மாவட்ட சுகாதாரப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை அலுவலகத்தில் மனு அளித்தார்.இந்நிலையில் மனு அளித்து 10 நாட்களுக்கு மேலாகியும் இது நாள் வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறி சுகாதார பணிகள் அலுவலகம் முன்பு அமர்ந்து அவர் தர்ணாவில் ஈடுப்பட்டார்.
 
தர்ணாவில் ஈடுப்பட்ட அவர் மருத்துவத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அரசு அதிகாரிகள் செயல்படுவதில்லை என குற்றம் சாட்டினார்.