1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 18 ஜூன் 2024 (08:33 IST)

பிஸ்கெட் போட்ட சிறுவனை கடித்த தெருநாய்.. மருத்துவமனையில் அனுமதி.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..

dogs
சென்னையில் நாய்கள் மற்றும் மாடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சி இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகின்றன.

நேற்று எருமை மாடு முட்டியதால் இளம் பெண் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று பிஸ்கட் போட்ட சிறுவனை நாய் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் நொச்சிகுப்பம் என்ற பகுதியில் உள்ள ஆறு வயது சிறுவன் வீட்டு வாசலில் இருந்த தெரு நாய்க்கு பிஸ்கட் போட்டதாகவும் அப்போது அந்த தெரு நாய் எதிர்பாராத விதமாக சிறுவனை கடித்து குதறியதாகவும் தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிறுவனுக்கு தோள்பட்டை உள்ளிட்ட பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டிருப்பதாகவும் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நாய்கள் தொல்லை மற்றும் மாடுகள் தொல்லை அதிகரித்து வருவதை அடுத்து சென்னை மாநகராட்சி இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Edited by Siva