1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 10 ஜூன் 2024 (15:18 IST)

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரவுடிகள் அட்டகாசம்.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரவுடிகள் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கண்ணாடிகளை சேதப்படுத்தியதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கஞ்சா மற்றும் கொலை வழக்கில் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரௌடி கும்பல் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கண்ணாடிகளை சேதப்படுத்தி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது.
 
போதை பொருள் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடு அடையாள அட்டையாக திகழும் இந்த விடியா திமுக ஆட்சியில் பொதுமக்கள் மருத்துவ உதவி பெற வரும் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு இல்லாத சூழல் தான் உள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் ரவுடி கும்பல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியது என்பதும் இதில் மருத்துவமனையில் உள்ள பல உபகரணங்கள் சேதம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva