புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 12 செப்டம்பர் 2020 (08:02 IST)

சமுத்ரகணியை சந்தித்த பாஜக அண்ணாமலை … பின்னணி என்ன?

திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கணி தமிழக பாஜகவின் துணைத் தலைவர் அண்ணாமலை சந்தித்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் போலிஸாக இருந்த சிங்கம் அண்ணாமலை தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு 62 ஏக்கரில் தற்சார்பு விவசாயம் மேற்கொண்டு வந்தார். அவரை ஊடகங்கள் முன்னிலைப் படுத்தி வந்த நிலையில் தமிழக பாஜகவில் இணைந்தார். இணைந்த உடனேயே அவருக்கு துணைத்தலைவர் பதவியும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் அவர் இப்போது கட்சிக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக சில நாட்களுக்கு முன்னர் அவர் இயக்குனர் சமுத்ரகனியை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சமுத்திரக்கணி பாஜகவில் சேரப்போகிறாரா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் இதை சமுத்திரக்கணி முற்றிலுமாக மறுத்துள்ளாராம். இருவருக்கும் இடையிலான சந்திப்பு தனிப்பட்ட நட்புரீதியான சந்திப்பு என அவர் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து சினிமா உலகில் உள்ளவர்களுக்கு பாஜக வலைவீசி வருவதாக சொல்லப்படுகிறது.