1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (17:14 IST)

அண்ணாமலை-செந்தில் விவாதத்தை நடத்த தயார்: 4 சேனல்கள் போட்டி!

அண்ணாமலை-செந்தில் விவாதத்தை நடத்த தயார்: 4 சேனல்கள் போட்டி!
சமீபத்தில் அண்ணாமலை அவர்கள் பாஜகவை குற்றச்சாட்டும் திமுகவை சேர்ந்தவர்கள் யாராவது தன்னுடன் விவாதிக்க தயாரா என சவால் விடுத்திருந்தார். இந்த சவாலை தர்மபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் ஏற்றுக்கொண்டு அண்ணாமலை உடன் விவாதம் செய்த தயார் என்று அறிவித்தார் 
 
இதனை அடுத்து தற்போது அண்ணாமலை மற்றும் டாக்டர் செந்தில்குமார் விவாதத்தை நேரடியாக ஒளிபரப்ப நாங்கள் தயார் என நான்கு முன்னணி சேனல்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதனை டாக்டர் செந்தில்குமாரும் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.
 
இந்த நான்கு சேனல்களில் ஒன்றை அண்ணாமலை மற்றும் செந்தில்குமார் ஆகியோர் இணைந்து தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் ஒரு முன்னணி சேனலில் இருந்து விலகி சென்று தனியாக யூடியூப் சேனலை நடத்தி வரும் ஊடகவியலார் செந்தில் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் அண்ணாமலை-செந்தில் இருவரும் விரும்பினால் நேர்காணல் நடத்த தயார் என்று அறிவித்துள்ளார் 
 
இன்னும் ஓரிரு நாட்களில் அண்ணாமலை மற்றும் செந்தில்குமார் விவாதம் நடத்தும் தொலைக்காட்சி எது என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது