1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Senthil Balaji will join in rajini party

ரஜினி கட்சிக்கு திமுகவின் செந்தில்பாலாஜி செல்வாரா? அமைச்சரின் பேச்சால் பரபரப்பு

செந்தில் பாலாஜி
அதிமுகவிலிருந்து விலகி டிடிவி தினகரன் அணியில் சேர்ந்த செந்தில் பாலாஜி, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திடீரென திமுகவில் இணைந்தார். தற்போது அவர் திமுக எம்எல்ஏவாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கேள்வி ஒன்றுக்கு சட்டசபையில் பதிலளிக்கும்போது ’விரைவில் செந்தில் பாலாஜி ரஜினி கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாகக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இன்றைய சட்டப்பேரவையின் போது பங்கேற்று பேசிய செந்தில் பாலாஜி அதிமுக அரசின் திட்டங்களை குறைகூறி பேசினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் ’அதிமுகவில் செந்தில் பாலாஜி இருந்தபோதுதான் உடலும் உயிரும் அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கும் என்று பேசியிருந்தார். ஆனால் அதன் பின்னர் சில மாதங்களில் டிடிவிதினகரன் பக்கம் சென்று அதே வசனத்தை பேசினார். தற்போது முக ஸ்டாலின் பக்கம் இருக்கும் செந்தில் பாலாஜியும் மீண்டும் அதே வசனத்தை பேசி வருகிறார். எதிர்காலத்தில் அவர் ரஜினி கட்சியில் சேர்ந்தாலும் தன் உடலும் உதிரமும் உள்ளவரை ரஜினிக்கு ஆதரவு என திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி கூறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் எம்எஸ் விஜயபாஸ்கர் தெரிவித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
அடுத்த கட்டுரையில்
பதவிக்காக தன்னைத் தானே தாக்கிக்கொண்ட பாஜக பிரமுகர் !