புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 16 மார்ச் 2020 (12:24 IST)

திமுகவில் காலியான ரெண்டு சீட்டுகள்; குவியும் போட்டிகள்!

திமுக கட்சியின் பொருளாளராக பதவி வகித்து வந்த துரைமுருகன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

திமுக பொது செயலாளராக பதவி வகித்து வந்த க.அன்பழகன் உடல்நல குறைவால் காலமானார். அதை தொடர்ந்து கட்சியின் பொது செயலாளர் பதவி காலியானது. அடுத்த பொது செயலாளராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற பேச்சு எழுந்த நிலையில் கட்சியின் மூத்த உறுப்பினரான துரைமுருகன்தான் அந்த பதவியை பெறுவார் என பேசிக்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே துரைமுருகன் திமுக கட்சியின் பொருளாளராக பதவி வகித்து வந்த நிலையில் பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் தற்போது திமுக கட்சியின் பொது செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு காலி இடம் உண்டாகியுள்ளது.

இந்த இரண்டு பதவிகளுக்குமான தேர்தல் மார்ச் 29ம் தேதி நடைபெறும் என கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொது செயலாளர் பதவி துரைமுருகனுக்குதான் கிடைக்கும் என முடிவாகிவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது. இதுதவிர பொருளாளர் பதவிக்கு மூன்று முக்கிய நபர்கள் காய் நகர்த்தி வருவதாக பேசிக் கொள்ளப்படுகிறது.