1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2022 (12:31 IST)

மின் இணைப்பு – ஆதார் எண் இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பா? – அமைச்சர் தகவல்!

tneb
தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்தது. ஆரம்பத்தில் மெதுவாக இணைக்கும் பணிகள் நடந்து வந்த நிலையில் மின்சாரவாரியம் மின் இணைப்பு – ஆதார் இணைப்பு முறையை எளிமையாக்கியது.

பலரும் வீட்டிலிருந்தே மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைத்துக் கொண்டனர். பலர் மின்சார வாரியம் அமைத்துள்ள சிறப்பு இணைப்பு முகாம்கள் மூலமாக இணைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 2.33 கோடி மின் இணைப்புகள் உள்ள நிலையில், இதுவரை 1.40 கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன.


மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளுக்கு டிசம்பர் 31ம் தேதி இறுதி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கிட்டத்தட்ட 90 லட்சத்திற்கும் அதிகமான மின் இணைப்பு எண்கள் ஆதாருடன் இணைக்கப்படாமல் உள்ளன.

இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, அடுத்த 2 நாட்களுக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்கள் எவ்வளவு இணைக்கப்படுகின்றன என்பதை கணக்கிட்டு, பின் முதல்வரிடம் ஆலோசனை மேற்கொண்டபின் கால அவகாசம் நீட்டிப்பு குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். கால அவகாசம் நீடிக்கப்பட்டால் ஜனவரி 15 வரை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit By Prasanth.K