திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (10:14 IST)

ஆட்டுக்குட்டி வளர்த்த காசில் காஸ்ட்லியான வாட்ச்சா? அண்ணாமலைக்கு செந்தில்பாலாஜி கேள்வி!

annamalai senthil balaji
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே அடிக்கடி சமூக வலைதளங்களில் ஏற்படும் வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச் குறித்து செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில் அவர் “பிரான்ஸ் நிறுவத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார்.

அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம். வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது இந்த ட்விட்டர் பதிவை தொடர்ந்து அந்த வாட்ச் குறித்த பேச்சு வைரலாகியுள்ளது.

Edit by Prasanth.K