1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. senthil balaji custody extended 15th time

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 15வது முறையாக காவல் நீட்டிப்பு: நீதிமன்றம் உத்தரவு..!

senthil balaji
அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் இன்று முடிவடைவதை அடுத்து அவருக்கு 15வது முறையாக காவலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  
 
சட்டவிரோதமான பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில்  அவர் கடந்த ஆறு மாதங்களாக சிறையில் உள்ளார். 
 
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது ஜாமீன் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில்  இன்றுடன் அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து காணொளி மூலம் அவர் ஆஜர் படுத்தப்பட்டார். இதனை அடுத்து அவரை ஜனவரி 22 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.  
 
இதனை அடுத்து 15 வது முறையாக அவரது காவல் நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
பி.எட். 2 ஆண்டுகள் படிப்புக்கு இனி அனுமதி இல்லை! தேசிய ஆசிரியர் கவுன்சில் தகவல்..!