1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (16:23 IST)

தம்பிதுரைக்கு வாக்குகள் கேட்டதற்கு மன்னியுங்கள் - செந்தில் பாலாஜி அதிரடி

எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய நான் தயார்; நீங்கள் தயாரா? என தினகரனின் ஆதரவாளரும், கரூர் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வுமான செந்தில்பாலாஜி சவால் விடுத்துள்ளார். 

 
கடந்த 29-ம் தேதி, கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் டி.டி.வி.தினகரனை வைத்து எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை நடத்த முயன்றார் செந்தில் பாலாஜி. ஆனால், அதற்கு நகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் அனுமதி மறுத்துவிட்டது. மதுரை உயர் நீதிமன்றத்தில் அனுமதி வாங்கியும், நகராட்சி நிர்வாகம் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கவில்லை. இதனால்,  கடந்த 31 ம் தேதி தமிழக அரசு அறிவித்துள்ள பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து, கரூர் உழவர் சந்தை அருகே கண்டனப் பொதுக்கூட்டத்தை அ.தி.மு.க அம்மா அணியினர் ஏற்பாடு செய்தனர்.
 
ஈரோடு கூட்டத்தை முடித்துக் கொண்டு வந்த டி.டி.வி அணியை சார்ந்த, அ.தி.மு.க அம்மா அணியின் கழக அமைப்பு செயலாளரும், கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி, உடனே பொதுக்கூட்டத்தில் ஏறி பேச ஆரம்பித்தார். 
 
எம்.ஜி.ஆர் வழியில் ஆளுகின்ற இயக்கமே, மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது என்ற வரலாற்று சாதனையை 32 ஆண்டுகளுக்கு பிறகு உருவாக்கி தந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள். 2011 ல் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் பொறுப்பேற்று, ஏழை, எளிய மக்கள் பயணிக்க கூடிய பயண வசதிகளை மிகச்சிறப்பாக செய்து வந்தார். அப்போதெல்லாம், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது. எப்படி டீசல் விலை உயர்ந்தாலும் கூட, மத்திய அரசிற்கு முதலமைச்சர் என்கின்ற முறையில் தமிழக மக்களின் சார்பில் கண்டனத்தை தெரிவித்து வந்தார்.
 
தொடர்ந்து மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தினாலும் கூட, தமிழக மக்களை பாதிக்காத அளவிற்கு பேருந்து கட்டண உயர்வை ஏற்றாமல், ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடக்கூடாது என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சிந்தித்து செயல்பட்டார். மேலும் எத்தனை முறை டீசல் விலை உயர்ந்தாலும், அந்த உயருகின்ற தொகை, தமிழக அரசே, போக்குவரத்துக்கழகத்திற்கு தரும் என்று கூறி, தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுக்காத்தவர் ஜெயலலிதா, ஒரே ஆய்வுக்கூட்டத்தில் இந்த முடிவை ஜெயலலிதா எடுத்தார்கள் என்றும், அப்போதெல்லாம் மூத்த அமைச்சர்கள் என்று தற்போது உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வமும் என்று எல்லோரும் தான் இருந்தார்கள். 
 
ஆனால், அம்மாவின் (ஜெயலலிதா) ஆட்சியை தான் நடத்துகின்றோம் என்று கூறி ஆட்சியை நடத்துகின்ற எடப்பாடி பழனிச்சாமி, தற்போது அரசுப்பேருந்து கட்டணத்தை உயர்த்தி, டீசல் விலை உயர்ந்து விட்டது, ஆகையால் பேருந்து கட்டணத்தை உயர்த்துகின்றோம் என்று கூறி ஏழை, எளிய மக்களின் பயண வாழ்வாதாரத்தில் பெரும் சுமையை ஏற்படுத்தியவர் இந்த எடப்பாடி பழனிச்சாமி.

 
மேலும், முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் ஒரு சிறப்பான ஆட்சியை தந்தார்கள். ஆனால் தற்போது இருக்க எடப்பாடி அரசு? என்றதோடு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதாவின் ஆட்சியை தான் நடத்துகின்றோம் என்றெல்லாம் கூறுகின்றீரே, அது உண்மையானால், நாளையே, பேருந்து கட்டணம் உயர்வை திரும்ப பெறுங்களே என்று சவால் விட்ட, அவர் (செந்தில் பாலாஜி), தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆங்காங்கே போராடுகின்றார்கள். 
 
உண்மையில் மக்கள் விரும்புகிற, ஒன்றரைக் கோடி அ.தி.மு.க உறுப்பினர்களில், 90 சதவிகித உறுப்பினர்கள் விரும்புகிற தலைவரா அண்ணன் டி.டி.வி.தினகரன் மட்டுமே இருக்கிறார். ஆனால், இ.பி.எஸ், 'அவர் பெற்ற வெற்றி ஆர்.கே.நகரோடு முடிஞ்சுட்டு'ன்னு வாய்கூசாம சொல்றார். துரோகிகள் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்ஸுக்கு சவால் விடுறேன்; அரவக்குறிச்சி தொகுதியில் எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா பண்ணிடுறேன். நீங்களும் உங்கள் தொகுதிகளில் உங்க சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா பண்ணிடுங்க. அந்த மூன்று தொகுதிகளில் நீங்களும் வேட்பாளர்களை நிறுத்துங்க, அண்ணன் டி.டி.வி.தினகரனும் வேட்பாளர்களை நிறுத்தட்டும். யார் வெற்றிபெறுகிறார்கள் என்பது அப்போது தெரியும். என்ன, சவாலுக்குத் தயாரா? 
 
கரூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக உள்ள தம்பித்துரை பைபாஸ்லியே சென்று, பைபாஸ் லியே நிகழ்ச்சிகளை முடித்து விட்டு செல்வார். அவருக்கக  நான் உங்களிடம் வாக்குகள் கேட்டதற்காக மன்னிப்பு கேட்கின்றேன், நல்லது செய்வார் என்று நினத்து தான் வாக்குகள் கேட்டேன், ஆனால்! இப்படி உள்ளார் என்பதை நினைத்து நானே வருத்தப்படுகின்றேன் என்றதோடு, எடப்பாடி பழனிச்சாமி உதவியுடன் பொதுக்குழு தீர்மானத்தை நிறைவேற்றியதோடு, அ.தி.மு.க வின் கழக பொதுச்செயலாளர் சசிகலா என்பதை அவரே ஒப்புதல் அளித்ததோடு, அந்த நகலை, சசிகலாவிடம் கொடுத்தவரே தம்பித்துரை தான், தற்போது, ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமியோடு, கூட்டு சேர்ந்து தம்பித்துரையும் நடிக்கின்றார் என்பதோடு, இந்த தொகுதிக்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல், குடிநீர், சாலைவசதி என்று எந்த வித திட்டங்களையும் தீட்டாமல், இதுவரை 9 ஆண்டுகளாக இந்த தொகுதியில் என்ன திட்டங்களை செய்தா?. 
 
மேலும் கரூர் டூ கோவை நான்குவழிச்சாலை அமைக்கப்படும் என்றார். ஆனால் தற்போது இரண்டு முறை அவர் எம்.பி யானதோடு, 9 வருடங்களாகியும் எந்த வித திட்டங்களையும் தீட்டவில்லை,. மேலும் தேர்தல் வர உள்ளது, தற்போது காவல்நிலையத்தில் தான் ரோட்டை காணவில்லை என்று புகார் கொடுக்க வேண்டுமென்றார். அப்போது, அவருக்கு சொந்தமான கல்லூரி நிறுவனங்கள் எத்தனை உள்ளது,. தற்போது விவசாயக்கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரியும், இயக்கப்படுவதாக தெரிகின்றது. ஆனால் அந்த கல்லூரிகளில் நமது தொகுதியை சார்ந்த ஒருவரை இலவசமாக கல்வி பயிலவைத்துள்ளாரா? நீங்களே கேளுங்கள்”
 
என்று செந்தில் பாலாஜி பேசினார்.

- சி.ஆனந்தகுமார்