ஸ்டாலினுடன் அமைச்சர் தங்கமணி : ஆதாரத்தை வெளியிட்ட செந்தில் பாலாஜி (வீடியோ)
எம்.எல்.ஏ டி.டி.வி தினகரன் தி.மு.க வுடன் கைகோர்த்தது என்ற தகவலை பரப்பிய அமைச்சர் தங்கமணி தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கை கோர்த்த புகைப்படத்தை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், அ.தி.மு.க அம்மா அணியின் கழக அமைப்பாளரும், கரூர் மாவட்ட செயலாளருமான வி.செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு, பேட்டியளித்தார்.
டிடிவி தினகரன், தி.மு.க-வுடன் கூட்டு வைத்து இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் திட்டத்தில் உள்ளதாகவும் தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். பொதுமக்களுக்கு தெரியும், யார், தி.மு.க வுடன் கை கோர்த்துள்ளார் என்று கூறிய செந்தில் பாலாஜி, அமைச்சர் தங்கமணி தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுடன் உள்ள புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார்.
மேலும், அமைச்சர் தங்கமணி தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கை கோர்த்த காட்சி புகைப்படங்களாக பலருடைய வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் வலம் வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.