1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 2 நவம்பர் 2020 (12:36 IST)

ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆவேசம்!

ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஆவேசமாக கருத்துக் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஊழல் என்பது இந்தியாவில் ஒரு சபிக்கப்பட்ட குற்றமாக மாறிவிட்ட நிலையில் ஊழலுக்கு எதிராக எந்த வழக்கு பதிவு செய்தாலும் அதில் இருந்து ஊழல்வாதிகள் தப்பித்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது
 
இந்த நிலையில் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால் தான் லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரிசெய்யப்படும் என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவருக்கும் இது பொருந்தும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் செய்யும் குற்றவாளிகளுக்கே தூக்கு தண்டனை நிறைவேற்ற பல ஆண்டுகள் ஆகி வரும் இந்தியாவில் ஊழல் செய்பவர்களை தூக்கிலிடுவது நடைமுறையில் சாத்தியமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
இருப்பினும் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகளின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது