1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 2 நவம்பர் 2020 (11:22 IST)

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைகோரி முறையீடு!

ஆன்லைன் சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்டு வருவதாகவும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றன. கிரிக்கெட் சூதாட்டம் உள்பட அனைத்து வகை சூதாட்டங்களையும் தடை செய்து உள்ள அரசு, ஆன்லைன் சூதாட்டத்திற்கு மட்டும் தடை விதிக்காமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முறையீடு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க கோரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் வழக்கறிஞர் நீலமேகம் என்பவர் ஒரு முறையீடு செய்துள்ளார் 
 
ஆனால் முறையீட்டுக்கு பதில் மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் உறுதி கொடுத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்