செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 30 ஜூலை 2020 (16:17 IST)

தள்ளிப்போகிறது டிவியில் க்ளாஸ்: செங்கோட்டையன்!

திங்கட்கிழமை முதல் தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 
தொலைக்காட்சி மூலம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் தொலைக்காட்சிகளின் மூலமாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் முன்னர் தெரிவித்திருந்தார். அதோடு, இந்தியாவில் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தும் முதல் மாநிலம் தமிழகம் தான் எனவும் பெருமிதம் கொண்டார்.   
 
மேலும், மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்த 14 சேனல்கள் பாடங்களை ஒளிபரப்ப முன் வந்துள்ளனர். இவற்றில் பாடங்கள் ஒளிபரப்பபடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது திங்கட்கிழமை முதல் தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.