ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 ஜூலை 2020 (11:43 IST)

புதிய கல்வி கொள்கை வரவேற்க வேண்டியது! – நடிகை குஷ்பு ட்வீட்!

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கையை பாராட்டி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தன. முக்கியமாக மும்மொழி கொள்கை போன்றவற்றிற்கு எதிராக பலர் பேசி வந்தனர். இந்நிலையில் நேற்று எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் மிக எளிமையாக புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது.

மத்திய அரசின் இந்த புதிய கல்வி கொள்கைக்கு கல்வி வல்லுனர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது. பெரும்பாலும் புதிய கல்வி கொள்கைகள் குறித்து பலரும் ஆதரவாகவே பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள நடிகையும், மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு புதிய கல்விக் கொள்கை வரவேற்கப்பட வேண்டிய ஒரு நகர்வு என கூறியுள்ளார்.