வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (13:09 IST)

அடுத்த கல்வியாண்டில் சந்திரயான் - 3 வெற்றி பாடம்.. கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்..!

அடுத்த கல்வியாண்டில் சந்திராயன்  - 3 வெற்றி குறித்த கட்டுரை பாடத்திட்டங்களில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 
 
 இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்தராயன் - 3 என்ற விண்கலம் சமீபத்தில் நிலவின் தென்துருவத்தை அடைந்தது என்பதும் நிலவின் தென்துருவத்தை அடைந்த முதல்  நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது
 
சந்திராயன் - 3 வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது என்பதும் சந்திராயன் - 3 நிலவை அடைந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்றும் சந்திராயன் - 3 தரையிறங்கிய இடத்தை சிவசக்தி என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். 
 
இந்த நிலையில் சந்திராயன் - 3 வெற்றி குறித்த கட்டுரை அடுத்த கல்வியாண்டில் பாடத்திட்டத்தில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விரைவில் நடைபெற உள்ள உயர் அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறினார்
 
Edited by Siva