1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rajinikanth brother meet veeramuthuvel father

சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலின் தந்தையை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் சகோதரர்..!

சந்திராயன் 3
சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் தந்தையை சூப்பர் ஸ்டார் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயண ராவ் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சமீபத்தில் சந்திராயன் 3 என்ற விண்கலம்  சந்திரனை வெற்றிகரமாக அடைந்தது என்பதும் இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே. 
 
குறிப்பாக சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் என்பவர் தமிழர் என்பதால் அவருக்கு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு க ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளனர். 
 
மேலும் வீரமுத்துவேல் சமீபத்தில்  ஈஷா யோகா மையத்துக்கு சென்று  வழிபாடு செய்த புகைப்படங்களும் வைரல் ஆகின. இந்த நிலையில் சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலின் தந்தையை நடிகர் ரஜினிகாந்த்  சகோதரர் சத்திய நாராயண ராவ் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு.. 200 விமானங்கள் ரத்து..!