தொடர்புடைய செய்திகள்
- பாஜகவுக்கு ரூ.11,562 கோடி நன்கொடை: தேர்தல் பத்திர விவரங்கள் வெளியீடு!
- பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைப்பு- மத்திய அரசு
- பிரதமரின் வருகையை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்.! காங்கிரஸ் அறிவிப்பு...!!
- சிஏஏ சட்டம்- எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியல்- உள்துறை அமைச்சர் அமித்ஷா
- புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்..! பிரதமர் மோடி தலைமையிலான குழுவினர் தேர்வு..!!
மோடியின் தமிழக வருகையை பத்தோடு பதினொன்றாகத்தான் பார்க்க வேண்டும்: செல்லூர் ராஜூ
பிரதமர் மோடியின் தமிழக வருகையை திமுக உள்பட பல கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் இது குறித்து கூறிய போது பிரதமர் மோடியின் வருகையை பத்தோடு பதினொன்றாக தான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பின்னர் அதிமுக தலைவர்கள் மோடி மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தமிழ்நாட்டுக்கு மோடி வருவதை பத்தோடு பதினொன்றாக தான் பார்க்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு செய்த திட்டங்களை பிரதமர் மோடி தான் சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
தேர்தலுக்காக பிரதமர் மோடி மேடைகளில் பேசி வருகிறார் என்றும் எம்ஜிஆர் ஜெயலலிதா குறித்து புகழ்ந்து பேசி வருகிறார் என்றும் அவரைப் போலவே அண்ணாமலையும் எம்ஜிஆர் புகழ்ந்து பேச வேண்டும் என்றும் ஆனால் அவர் ஏன் ஜெயலலிதாவை இகழ்ந்து பேசினார் என்பதை கேள்வி கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார்
மேலும் மோடியின் பேச்சுக்களை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்
Edited by Mahendran
